Home Team

Team

by Malarvizhi Baskaran

மலர்விழி :

மலர்விழி என்கிற எழுத்தாளர் மாயா, ஃப்ரீலான்ஸ் மல்டிமீடியா வடிவமைப்பாளராக இருக்கிறார்.  இது வரை இரண்டு அறிபுனைப் புதினங்கள்  ‘கடாரம்’ என்ற வரலாற்றுப்புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வாலாற்று பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும்  கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

தமிழ் மரபு சார் ஆய்வுகள் மற்றும் தென்கிழக்காசிய தமிழ்த்தொடர்புகள் குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமூகச்செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்.

சாந்தினிபீ:

முனைவர் சாந்தினிபீ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைபேராசிரியர். தம் பல்கலைக்கழகத்தில் சோழர் வரலாறு தென்னக வரலாறு முதுநிலைப்பாடங்களை அறிமுகப்படுத்தியவர்.  ‘கல்வெட்டுகளில் தேவதாசி’ உட்பட 7 புத்தகங்களும் 70க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

அலிகர் முஸ்லிம் பல்கலையின் ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி அலுவல்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். சிறந்த பெண்ணியச் சிந்தனையாளர் செயல்பாட்டாளர். தொடர்ந்து பல்கலையிலும் அலிகர் நகரத்திலும் பாலியல் துன்பத்துக்கு ஆளாபவர்களுக்கான தீர்வு நோக்கிய பணியில் காவல்துறை மற்றும் அரசுப்பிரதிநிதிகளோடு இணைந்து பணியாற்றி வருபவர்.

தேமொழி:

முனைவர் தேமொழி ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராக(program analyst) பணியாற்றியவர். தன்னார்வலராக முன்னர் வல்லமை இதழின் துணை ஆசிரியராகவும், தற்பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் “மின்தமிழ்மேடை” காலாண்டு இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டு வருவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் மட்டுறுத்தராகவும் செயல் பட்டு வருகிறார்

கடந்த 8 ¾ ஆண்டுகளாக திண்ணை, வல்லமை, கீற்று, சிறகு போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளும்; ஆய்விதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது படைப்புகள் நூல்வடிவம் பெற்று 6 நூல்களும் வெளியாகியுள்ளன.

றஞ்சனா இராஜ்:

இலங்கையில் பாடசாலை தலைமையாசிரியராக இருந்து இப்போது லண்டனில் வைத்தியசாலை உத்தியோகத்தராகப்பணியாற்றுகிறார்.லண்டனில் தமிழ்ப்பாடசாலை ஒன்று உருவாக்கி நடத்தி வருகின்றார்.

மேலும் தமிழ் பெண்கள் அபிவிருத்தி மன்றம் அமைப்பின் ஒருங்கமைப்பாளராகவும்,லண்டன் சமூக அபிவிருத்தி மன்றத்தின் முகாமையாளராகவும்,லண்டன் தமிழ் அருங்காட்சியகத்தின் சிரேஸ்ட மேலாளராகவும் இருக்கிறார்.

 

ஆனந்தி பாலசூரியன்:

இலங்கையில் பிறந்து வளர்ந்து, தற்போது நெதர்லாந்தில் நிதி அமைச்சில் வருமானவரி இலாகாவில் கட்டுப்பாட்டாளாராகப் பணியாற்றுகிறார். தமிழ் நெதர்லாந்து மொழிபெயர்ப்பாளராவும் வேலை செய்கிறார். கடந்த 21 வருடங்களாக தமிழ்ப்பாடசாலை ஒன்று நடத்தி வருகிறார். அத்துடன் மாணவர்களுக்கான தமிழ் கலாச்சார நிகழ்வுகளை 16 வருடங்கள் ஒழுங்கு செய்து நடத்தியிருக்றார்.

சமூகத்தின் மீதும் குறிப்பாக பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர். 2009 ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இவரது சமூக சேவைகளைப் பாராட்டி “Lid van oranje Nassau” என்ற விருது வழங்கப்பட்டது.

 

பிரவீணா:

அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றும் பிரவீணா தொடர்ந்து தமிழுக்கான தமிழ் மரபுகளை அயல்தேசத்தில் மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயல்பாடுகளில் தன்னை முன்னிறுத்தி வருபவர்.

அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களின் அவசரகால உதவிகளைத் தேடிச்செய்யும் பெரும்பணியை குழுவாக இணைந்து செய்து வருபவர்.

 

 

சம்யுக்தா விஜயன்


தொழில், தொழில் நுட்பம், கலை என்ற பலதுறைகளில் சிறந்து விளங்கும் தோழர் சம்யுக்தா விஜயன் அமெரிக்காவின் அமேசானில் தொழில்நுட்பத்துறையில் பத்து ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறார். தற்போது தென்கொரியாவில் பணியாற்றுகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் தனித்தும் திருநர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கார்ப்ரேட் நிறுவனங்களிலும் பணியில் சேர உதவி வருகிறார். இது குறித்தான பயிற்சிகளையும் உரைகளையும் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்.

 

வசந்தி:

 

சிங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளில் பல ஆண்டுகளாய் பங்களிப்பவர்.

சமூக செயல்பாட்டாளர், இந்திய மரபுடைமை நிலயத்தின் தொண்டூழியர்.

 

ப்ரீத்தி:

 

சென்னை டிஜி வைஷ்ணவ கல்லூரியில் சுற்றுலாத்துறையில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.தமிழர் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆர்வமுள்ளவர். புதுவை கோவில் காடு பற்றி சிறு ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை நடத்திய மெட்ராஸ் தின விழாவில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். நவீன வளர்ச்சி அடைந்தாலும் நாகரிகத்தையும் மனிதநேயத்தையும் என்றும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.

 

ஏஞ்சல் குயின்ரஸ் 

இலங்கையைச்சேர்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் யாழ் மாவட்டத்தின் Transgender Networkஇன் நிறுவனராவார். தொடர்ந்து LGBTIQ+ சமூகத்தின் மேன்மைக்காகக் குரல்கொடுத்துவரும் செயல்பாட்டாளர்